Pages

Header

Thursday, March 9, 2017

கடவுளின் Whats app group

கடவுள் ஒருநாள், 
ஒரு வாட்ஸ் ஆப் குரூப்பை opan பண்ணுனார்.. 
அதற்க்கு "உலகம்" என்று தலைப்பிட்டார்....... 

அதில் முதலில், 
வானத்தையும், பூமியையும் add பண்ணுனார், 

அடுத்து, சூரியன், கடல், மழை, ஆறு,குளம்,மரங்கள், விலங்குகள், பறவைகள், ஊரும் பிராணிகள் என வரிசையாக add பண்ணி மகிழ்ந்தார்... 

இறுதியாக, 
மனிதனை add பண்ணுனார். 

மனிதனை add பண்ணிய 
கடவுள், மிகவும் மனமகிழ்ந்து, " இனி இந்த group க்கு நான் 
தேவை இல்லை, மனிதனே இந்த group ஐ நல்ல படியாக நடத்தி செல்வான்" என்று எண்ணி, மனிதனை group admin ஆக்கி விட்டு, அவர் left ஆகி சென்று விட்டார். 

கொஞ்ச நாட்க்கள் நன்றாக செயல் பட்ட மனிதன், 
காலப்போக்கில் தன் சுய நலத்திற்க்காகவும், சுய 
இலாபத்திற்க்காகவும், மரங்கள், குளம், ஆறு போன்றவற்றை 
remove பண்ணி விட்டு, அதற்க்கு பதிலாக, shoping mall, apartment, factory's போன்றவற்றை add பண்ணினான். 

இதனால் கோபம் கொண்ட மழை, " என் நண்பர்கள் 
இல்லாத இந்த group ல் நானும் இருக்க மாட்டேன் என்று, 
கோபத்துடன் left ஆகி சென்றது... ஆனால் சூரியன் left ஆகாமல், 

group ல் இருந்தபடியே, தன் கோபத்தை மனிதன் மீது காட்டிக் 
கொண்டிருக்கிறது....😔😔😔😔

No comments:

Post a Comment