தூங்கும் போது உங்களை யாராவது அமுக்குவது போல் இருக்கிறதா?
தூங்குறப்போ......அடிக்கடி என்னை பேய் வந்து அமுக்குதுன்னு நிறைய பேரு சொல்லிக் கேட்டுருப்போம்..!
அவ்வளவு ஏன்..? நம்மில் பலருக்கும் அந்த அனுபவமும் கூட இருக்கும்..! அது ஏன்?
உண்மையிலயே பேய் தான் வந்து அமுக்குகிறதா..? பாப்போம் வாங்க..!
மனித உறக்கத்தில் இரண்டு நிலை உண்டு.
ஒன்று விரைவான கண் அயர் இயக்கம்
(RAPID EYE MOVEMENT @REM)
மற்றொன்று அதற்கு எதிர்பதம் (NonREM @NREM).
.
நீங்க உறங்க தொடங்கியதும் உங்களுக்கு முதலில் நிகழுவது NREM.
அடுத்து REM நிகழும்.!
இப்படி இரண்டுமே மாறிமாறி நிகழும் தன்மை கொண்டதே மனித உறக்கம்.
ஒரு REM அல்லது NREMன் சுழற்சி 90 நிமிடங்கள் வரை இருக்கலாம்.
NREMன் கடைசி கட்டத்திலேயே உங்கள் உடல் முழுமையா உறக்கத்தின் கட்டுப்பாட்டுக்கு வந்து 100% தளர்ந்திருக்கும்.
அப்போது சுயநினைவும் முழுவதும் மங்கியிருக்கும். NREM நிலை முடிந்து REM நிலை தொடங்கும்போது உங்கள் கண்கள் கொஞ்சம் இயங்கும். கனவுகளும் தோன்றும், ஆனால் உங்கள் உடல் இன்னும் தளர்ச்சி நிலையிலேயே இருக்கும்.!
REM சுழற்சியில் இருக்கும் உங்கள் உடல் உறக்கத்தில் இருக்கும்போது...
அந்த சுழற்சி முடிவதற்குள் சிலநேரம் உங்களுக்கு சுயநினைவு தோன்றினால்...
உங்கள் உடல் 100% REM சுழற்சியில் இருப்பதால் அசைக்க முடியாது.
மூளை விழித்திருக்கும். ஆனால் மூளையின் கட்டளைகளை உடல் உறுப்புகள் ஏற்றுக் கொள்ளும் நிலையில் இருக்காது (இரண்டாவது படம் பார்க்க).
அப்போதுதான் நமக்கு தோணும், "அய்யய்யோ நான் கைகாலை அசைக்க ட்ரைப் பண்றேன் ஆனா என்னால முடியலயே பேய் வந்து அமுக்குது போல" என்று.!
சிலநேரம் அதற்கு தோதாக நமது மூளையில் நிகழ்ந்து கொண்டிருக்கும் கணவும் பேய் நினைப்புக்கு சென்று ஒரு பேயையும் கணவில் கொண்டு வந்து காட்டும்..!
SLEEP PARALYSIS - என்பதுதான் உங்களை வந்து அமுக்கிய பேய்.!
உண்மையிலயே அது பேய் அல்ல. அது நம் உறக்கத்தில் தோன்றும் ஒரு நிலை.!
உலகமெங்கும் நிறைய மக்களுக்கு இந்த SLEEP PARALYSIS நிகழ்கிறது... அதனால் பயப்பட ஏதும் தேவை இல்லை..!!!
No comments:
Post a Comment