தினந்தோறும் முளைக்க்கீரையை சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகளையும், நோய்களை குணப்படுத்துவதைப் பற்றியும் இங்கே குறிப்பிடப்பட்டுள்ளது.
முளைக்கீரை வயிற்றுப்புண்ணை ஆற்றுவதில் சிறந்து விளங்குகிறது.. கண்பார்வையை கூர்மையாக்கக்கூடியது. இந்த கீரையில் கால்சியம், பாஸ்பரஸ் போன்ற சத்து நிறைந்துள்ளது.
மாவுச்சத்தும் குறிப்பிடும் அளவுகளில் உள்ளது. அதனால், உடல் வலுவடையவும், வளரும் சிறுவர்களுக்கு இந்த கீரையை தொடர்ந்து கொடுத்து வந்தால் உடல் நல்ல வளர்ச்சி அடையும். முளைக்கீரையை சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகளும்.குணமாகும் நோய்களும் பார்க்கலாம்.
இருமலுக்கு:
இக்கீரையில் அடங்கியுள்ள இரும்பு மற்றும் தாமிர சத்து, ரத்தத்தை சுத்தம் செய்வதோடு, இதில் அடக்கியுள்ள மணிச்சத்து மூளை வளர்ச்சிக்கு உதவுகிறது. முளைக்கீரை, அதிமதுரம் ஒரு துண்டு, மஞ்சள் 3 சிட்டிகை மூன்றையும் சேர்த்து கஷாயமாக செய்து சாப்பிட்டால் எப்படிப்பட்ட இருமலும் குணமாகும்.
காய்ச்சல்:
முளைக்கீரையுடன் சீரகத்தை நெய்யில் வறுத்து சேர்த்து, மிளகாய் வற்றலை கிள்ளிப்போட்டு, தண்ணீர் சேர்த்து அவித்து சாற்றை வடித்து, சாதத்தோடு கலந்து சாப்பிட்டால் அனைத்து வகையான காய்ச்சலும் குணமாகும்.
மூலம்:
முளைக்கீரை, துத்திக்கீரை இரண்டையும் சம அளவு எடுத்து, சிறுபருப்பு சேர்த்து சமைத்து சாப்பிட்டால் உள்மூலம், , ரத்த மூலம் போன்றவை சரியாகும்.
பசியின்மை:
முளைக்கீரையுடன் மிளகு, சீரகம், பூண்டு, சின்ன வெங்காயம், மஞ்சள் ஆகியவற்றை சேர்த்து கொதிக்க வைத்து சாப்பிட்டால் பசியின்மை நீங்கி, நல்ல பசி உண்டாகும்
வயிற்றுப் புண்:
முளைக்கீரையை பாசிப்பருடன் சேர்த்து சமைத்து தினந்தோறும் சாப்பிட்டு வந்தால் வயிற்றுப் புண் ஆறிவிடும். அல்சர் குணமாகும்.
THANX FOR UR INFO, STEP AHEAD
ReplyDeleteTq bro
DeleteAwesome bro keep going
ReplyDeleteTq
Delete