Pages

Header

Friday, March 31, 2017

ஏன் 40 வயதிற்கு மேல் தொப்பையை எளிதில் குறைக்க முடியவில்லை என்று தெரியுமா?

       
இளம் வயதில் உடலைக் கட்டுக்கோப்புடன் வைத்துக் கொள்ள உடல் எடை அதிகமாக இருந்தாலும், அதை டயட் மற்றும் உடற்பயிற்சியின் மூலம் எளிதில் குறைத்துவிடலாம். ஆனால் 40 வயதிற்கு மேல் உடல் எடையைக் குறைப்பது என்பது மிகவும் கடினமாக இருக்கும். பிட்னஸ் நிபுணரான ரோஷ்னி ஷா, ஏன் வயது அதிகரிக்கும் போது உடல் எடையைக் குறைப்பது மிகவும் கடினமாக உள்ளது என்று ஒருசில காரணிகளைப் பட்டியலிட்டுள்ளார். அதைக் கொஞ்சம் படித்துப் பாருங்கள்.


தசைகளின் அடர்த்தி குறையும்:
 உடலின் மெட்டபாலிசத்தை நிலையாக வைத்துக் கொள்ள தசைகள் கலோரிகளை எரிக்கும். ஆனால் 40 வயதில் தசைகளின் அடர்த்தி குறைய ஆரம்பிக்கும். இதனால், எவ்வளவு தான் கலோரிகளை உட்கொண்டாலும், தசைகளால் கலோரிகளை எரிக்க முடியாமல் உடல் பருமன் தான் அதிகரிக்கும்.

பளு தூக்குவது நிறுத்துவது: 
பெரும்பாலானோர் 40 வயதிற்கு மேல் பளு தூக்கும் பயிற்சி கடினமாக உள்ளது என்று நிறுத்திவிடுவார்கள். ஆனால் தசைகளின் வளர்ச்சிக்கு பளு தூக்கும் பயிற்சி தான் முக்கியமானது. இதை தவிர்க்கும் போது, தசைகளின் அடர்த்தி குறைய ஆரம்பிக்கும். எனவே உடலின் மெட்டபாலிசத்தை நிலையாக வைத்துக் கொள்ள வாரத்திற்கு 2-4 முறையாவது பளு தூக்கும் பயிற்சியை மேற்கொள்ளுங்கள்.

வயிற்றில் கொழுப்புக்கள் தேங்கும்:
 
40 வயதிற்கு முன்பு வரை உங்கள் வயிறு தட்டையாக இருக்கலாம். ஆனால் 40 வயதிற்கு மேல் ஈஸ்ட்ரோஜென் மற்றும் புரோஜெஸ்டிரோன் ஹார்மோன்களின் அளவு குறைவதால், கொழுப்புக்கள் வயிற்றுப் பகுதியில் தேக்கி வைக்கப்படுகிறது. ஆகவே தொப்பை வராமல் இருக்க வேண்டுமெனில், 40 வயதிற்கு மேல் புரோட்டீன் உணவுகளை அதிகம் சாப்பிடுங்கள்.

உணவுகளைத் தவிர்த்தல்: 

இரவில் வயிறு நிறைய சாப்பிட்டுவிட்டேன் என்று, காலை உணவைத் தவிர்ப்பது மிகவும் தவறான பழக்கம். பொதுவாக உடலின் சீரான செயல்பாட்டிற்கு குறிப்பிட்ட அளவு கலோரிகள் அவசியம். இல்லாவிட்டால், மறுவேளை உணவு உட்கொள்ளும் போது அளவுக்கு அதிகமாக உட்கொள்ள வேண்டி, உடல் எடையைக் குறைக்க முடியாமல் அவஸ்தைப்படக்கூடும்.

சைவ உணவாளராக மாறுவது:

வயது அதிகரிக்கும் போது, இறைச்சிகளால் தான் உடல் எடையைக் குறைக்க முடியவில்லை என்று நினைத்து, பலரும் சைவ உணவாளராக மாறுவார்கள். அதுவும் நல்ல பழக்கம் தான். ஆனால் சைவ உணவாளராக மாறுகிறேன் என்று ஆரோக்கியமற்ற சைவ உணவாளராக மாறி, எடை குறைவதற்கு பதிலாக நாளுக்கு நாள் அதிகரித்திருப்பீர்கள்.




No comments:

Post a Comment