Pages

Header

Saturday, April 1, 2017

உடல் எடையை குறைக்க உதவும் 6 அற்புத வைத்தியங்கள்

உடலை கட்டுக்க்கோபாக வைப்பது மறைந்து காலப்போக்கில் சிறு வயதிலிருந்தே உடல் பருமனோடு வாழ தொடங்கி விட்டது இன்றைய சமூகம். காரணம் வாழ்க்கை முறையையும், உணவு முறையும் மாற்றப்பட்டதே காரணம்.

உடல் பருமன் பலவித நோய்களை தருகிறது என்பதில் எந்த வித சந்தேகமுமில்லை. ஆனால் அக்கறையேயில்லாமல் இருந்து பிறகு வாழ் நாள் முழுவதும் நோய்களோடு கிடப்பதை விட்டு , உடல் எடை குறைக்க முயற்சிப்பது மிகம் முக்கியம். நமது பாரம்பரிய வைத்திய முறைகளில் ஆயுர்வேத மூலிகைகள் உடல் எடை குறைக்கச் செய்யும் வகையில் குணங்களை பெற்றுள்ளது. அவற்றைப் பற்றி இங்கு காண்போம்.


நெல்லிக்காய்: 
நெல்லிக்காயை கொட்டை நீக்கி சுத்தம் செய்து, சாறு எடுத்து அதனுடன் சிறிது இஞ்சிச்சாறு கலந்து தினமும் காலையில் குடித்து வந்தால் கொழுப்பு குறையும்.

ஆமணக்கு:
 

ஆமணக்கின் வேரை இடித்து தேன் கலந்து நீரில் இரவு ஊற வைத்து காலையில் கசக்கிப் பிழிந்து, நீரை வடிகட்டி குடித்தால் உடல் பருமன் குறையும்.


பாதாம்: 
பாதாம் பவுடரை எடுத்து சிறிது தேன் கலந்து காலையில் சாப்பாட்டிற்கு பிறகு சாப்பிட்டு வந்தால் உடல் எடை குறையும்.


கேரட்: 
கேரட்டுடன் தேன் சேர்த்து சாப்பிட்டு வந்தால் தேவையற்ற கொழுப்பு குறைந்து உடல் எடை குறையும்.


சோம்பு: 
சோம்பு தண்ணீரில் போட்டு காய்ச்சி அடிக்கடி தினமும் குடித்து வந்தால் உடல் எடை குறையும்.


திரிபலா: 
திரிபலா சூரணத்தை வெந்நீரில் கலந்து காலையில் குடித்தால் எடை குறையும்






No comments:

Post a Comment