Pages

Header

Saturday, April 22, 2017

சீக்கிரம் கருவளையம் மறையனுமா? இதச் செய்யுங்க!!

ராத்திரி, பகல் பார்க்காமல், தூக்கம் தவிர்த்து உழைக்கிற வர்களுக்குத்தான் முன்பெல்லாம் கருவளையங்கள் வரும். இன்றோ அது பரவலாக எல்லோருக்கும் வருகிறது. கருவளையங்கள் தோன்றக் காரணங்கள் என்ன? அதற்கான தீர்வுகள், வராமல் தவிர்க்கும் வழிகள் கருவளையங்கள் வர முக்கியமான காரணங்கள் மூன்று. ஊட்டச் சத்துக் குறைபாடு, மரபு வழி, ஸ்ட்ரெஸ் மற்றும் கண்களுக்கு அதிக வேலை கொடுப்பது. காரணத்தைக் கண்டுபிடிக்க ஒரு எளிய டெஸ்ட் உள்ளது.
கண்ணாடி முன் நின்று கொண்டு, உங்கள் கண்ணுக்கு அடியிலான பகுதியை லேசாகக் கீழே இழுத்துப் பாருங்கள். உடம்பு சரியில்லை எனப் போனால் மருத்துவர்கள் உங்கள் கண்களை டெஸ்ட் செய்வார்களே, அதே மாதிரிதான். கண்ணுக்குள் பார்க்காமல், கண்ணுக்கடியிலான தோல் பகுதியைப் பாருங்கள். அது வெள்ளையாக இருந்தால் ஊட்டச்சத்து குறைபாடுதான் காரணமாக இருக்கும். அதிலும் குறிப்பாக இரும்புச் சத்தும் ஆக்சிஜனும் குறைவாக இருக்கும். கருப்பாக இருந்தால், கருவளையத்துக்கு மரபு வழியோ, ஸ்ட்ரெஸ் எனப்படும் மன அழுத்தமோ காரணமாக இருக்கலாம். சரி காரணங்கள் தெய்ர்ந்து கொண்டாலும் அவற்றை எப்படி போக்குவது என யோசிக்கிறீர்களா? இங்கே சொல்லப்பட்டிருப்பதை முயற்சித்துப் பாருங்கள்.

கலர் உணவுகள்:

ப்ளூபெர்ரி, பசலைக்கீரை, பீர்க்கங்காய், சிவப்பு முளைக்கீரை, காளான், உலர்ந்த திராட்சை, பன்னீர் திராட்சை, சப்போட்டா, அவகேடோ, கொய்யா, கொள்ளு, குதிரைவாலி அரிசி, கருப்பு உளுந்து, ராஜ்மா, ஆட்டீரல், காட்டு சீரகம் (வைல்ட் கியூமின்), சீஸ் - இவை அத்தனையும் கருவளையங்களை விரட்டும் சக்தி கொண்டவை.

உபயோகிக்காத டீ பேக்:

உபயோகித்த டீ பைகளை கண்களின் மேல் வைப்பது முழுமையான பலன் தராது. திக்கான டீ டிகாக்ஷனை எடுத்து ஃப்ரிட்ஜில் வைக்கவும். அதில் பேப்பர் மாதிரி மெலிதாக வெட்டிய பஞ்சை நனைத்து கண்களின் மேல் வைத்துக்கொண்டு 5 முதல் 7 நிமிடங்கள் ஓய்வெடுக்கவும். கிரீன் டீயாக இருந்தால் இன்னும் சிறப்பு.

பார்லி அரிசி, கருஞ்சீரகம்:

பார்லி அரிசி, கருஞ்சீரகத்தை தலா 2 டீஸ்பூன் எடுத்து அரை டம்ளர் தண்ணீரில் நன்கு வேக வைக்கவும். அது ஆறியதும் அதில் 10 மி.லி. சுத்தமான பன்னீர் கலந்து, அப்படியே 3 மணி நேரம் வைக்கவும். பிறகு வடிகட்டி. பஞ்சில் நனைத்து கண்களின் மேல் வைக்கவும். உடனடியாக ஒரு போட்டோ செஷனுக்கு தயாராக வேண்டும், வெளியே பார்ட்டிக்கு போக வேண்டும், கருவளையங்கள் தெரியக்கூடாது என நினைக்கும் போது இந்த சிகிச்சை இன்ஸ்டன்ட் பலன் தரும்.

சாமந்தி பூ:

2 கைப்பிடி சாமந்திப்பூவின் இதழ்களை மட்டும் எடுத்துக் கொள்ளவும். 100 மி.லி. தண்ணீரை நன்கு கொதிக்க வைத்து, அதில் இந்தப் பூக்களைப் போட்டு, உடனே மூடி வைக்கவும். 24 மணி நேரம் அப்படியே ஊறட்டும். பிறகு அந்தத் தண்ணீரை ஃப்ரிட்ஜில் வைத்துக்கொண்டு, அவ்வப்போது பஞ்சில் நனைத்து கண்களின் மேல் வைத்துக் கொள்ளலாம். இது முகத்தில் உள்ள கரும்புள்ளிகளைக் கூட விரட்டும். அதிக எண்ணெய் பசையை நீக்கும்.

தாமரைப் பூ:
 
தாமரைப்பூ இதழ்களை மிக்சியில் தண்ணீர் விடாமல் அரைக்கவும். அதில் 10 மி.லி. விளக்கெண்ணெயும், 10 மி.லி. தேனும் கலந்து 7 மணி நேரம் வெளியே வைக்கவும். பிறகு ஃப்ரிட்ஜில் வைத்துக் கொண்டு, கண்களைச் சுற்றி பேக் போலத் தடவி, 1 மணி நேரம் கழித்துக் கழுவவும்.

முள்ளங்கி கேரட் சாறு:

முள்ளங்கிச் சாறு, கேரட் சாறு, பீட்ரூட் சாறு (தண்ணீர் விடாமல் அரைத்துப் பிழிந்தது) இந்த மூன்றையும் கலந்து, 5 மி.லி. கிளிசரினும் 5 மி.லி. எலுமிச்சைச் சாறும் சேர்த்து ஃப்ரிட்ஜில் வைத்து தேவைப்படும் போது பஞ்சில் நனைத்துக் கண்களின் மேல் வைத்துக் கொள்ளலாம்.












Wednesday, April 12, 2017

அவகாடோ கொட்டையின் மருத்துவ நன்மைகள்............

நம்மில் பலர் அவகேடோவின் விதை புற்றுநோய் மற்றும் தைராய்டு பிரச்சனைகளுக்கு தீர்வைத் தரக் கூடியது என்று தெரியாமல் அதைத் தூக்கி எரிந்து விடுகின்றனர். இந்த அவகேடோ விதைகள் பல்வேறு வழிகளில் பல சுகாதார நன்மைகளைத் தருகிறது. நீங்கள் அவகேடோ விதையை சாப்பிடுவது சாத்தியமற்றது என்று நினைக்கலாம் ஆனால் உங்களின் ஆரோக்கியத்திற்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டுமெனில் இவற்றை நிச்சயமாக எடுக்கவும் முடியும்,ஆரோக்கியத்தை மேம்படுத்தவும் முடியும்.

கொழுப்பு: 


அவகேடோ விதை கொலஸ்ட்ராலின் அளவைக் குறைக்கவும்,வீக்கத்தைக் குறைக்கவும்,இரைப்பை குடல் பிரச்னைகளைத் தீர்க்கவும் உதவுகிறது.

காய்ச்சல்: 


அவகேடோ விதைகளை உட்கொள்வதால் நோய் எதிர்ப்பு சக்தியைத் தூண்டுகிறது.பொதுவாக அவகேடோ ஃப்ளேவனால் நிறைந்து உள்ளது.எனவே இது காய்ச்சல் மற்றும் சளியை குணப்படுத்த முடியும்.

மூட்டு வலி:


இவற்றில் உள்ள கேட்டசின்கள் மற்றும் ப்ரோசியானிடின்ஸ் காரணமாக இவை சக்தி வாய்ந்த ஆன்டி-இன்ஃப்ளமேட்டரிகளாகவும் செயல்பட்டு வீக்கத்தைக் குறைக்கவும்,மூட்டு வலிகளை நீக்கவும் உதவுகிறது.

புற்று நோய்: 


இந்த விதைகள் புற்றுநோய்க்கு எதிரான பண்புகளைக் கொண்டுள்ளது.புற்றுநோய் ஆராய்ச்சி பற்றி ஒரு இதழில் "அவகேடோவின் விதையில் உள்ள சாறில் அவகேட்டின் பி உள்ளது என்றும்,இவை தீவிரமான மைலாய்டு லுகேமியா அணுக்களை தடுக்கிறது என்றும்" கண்டறிந்து ஒரு கட்டூரையை வெளியிட்டுள்ளது.

வலிப்பு நோய்: 

வலிப்பு நோயைத் தடுக்கிறது. தைராய்டு கோளாறுகளை முறைப்படுத்துகிறது. கொலாஜன் உருவாவதற்கு உறுதுணையாக உள்ளது. வயிற்றுப்போக்குக்கு சிகிச்சை அளிக்கிறது. சோர்வை நீக்குகிறது. தசைகளின் சோர்வை/வலி ஏற்பட்டால் நீக்குகிறது . கட்டிகளின் வளர்ச்சியைத் தடுக்கிறது.

Saturday, April 1, 2017

உடல் எடையை குறைக்க உதவும் 6 அற்புத வைத்தியங்கள்

உடலை கட்டுக்க்கோபாக வைப்பது மறைந்து காலப்போக்கில் சிறு வயதிலிருந்தே உடல் பருமனோடு வாழ தொடங்கி விட்டது இன்றைய சமூகம். காரணம் வாழ்க்கை முறையையும், உணவு முறையும் மாற்றப்பட்டதே காரணம்.

உடல் பருமன் பலவித நோய்களை தருகிறது என்பதில் எந்த வித சந்தேகமுமில்லை. ஆனால் அக்கறையேயில்லாமல் இருந்து பிறகு வாழ் நாள் முழுவதும் நோய்களோடு கிடப்பதை விட்டு , உடல் எடை குறைக்க முயற்சிப்பது மிகம் முக்கியம். நமது பாரம்பரிய வைத்திய முறைகளில் ஆயுர்வேத மூலிகைகள் உடல் எடை குறைக்கச் செய்யும் வகையில் குணங்களை பெற்றுள்ளது. அவற்றைப் பற்றி இங்கு காண்போம்.


நெல்லிக்காய்: 
நெல்லிக்காயை கொட்டை நீக்கி சுத்தம் செய்து, சாறு எடுத்து அதனுடன் சிறிது இஞ்சிச்சாறு கலந்து தினமும் காலையில் குடித்து வந்தால் கொழுப்பு குறையும்.

ஆமணக்கு:
 

ஆமணக்கின் வேரை இடித்து தேன் கலந்து நீரில் இரவு ஊற வைத்து காலையில் கசக்கிப் பிழிந்து, நீரை வடிகட்டி குடித்தால் உடல் பருமன் குறையும்.


பாதாம்: 
பாதாம் பவுடரை எடுத்து சிறிது தேன் கலந்து காலையில் சாப்பாட்டிற்கு பிறகு சாப்பிட்டு வந்தால் உடல் எடை குறையும்.


கேரட்: 
கேரட்டுடன் தேன் சேர்த்து சாப்பிட்டு வந்தால் தேவையற்ற கொழுப்பு குறைந்து உடல் எடை குறையும்.


சோம்பு: 
சோம்பு தண்ணீரில் போட்டு காய்ச்சி அடிக்கடி தினமும் குடித்து வந்தால் உடல் எடை குறையும்.


திரிபலா: 
திரிபலா சூரணத்தை வெந்நீரில் கலந்து காலையில் குடித்தால் எடை குறையும்






Friday, March 31, 2017

ஏன் 40 வயதிற்கு மேல் தொப்பையை எளிதில் குறைக்க முடியவில்லை என்று தெரியுமா?

       
இளம் வயதில் உடலைக் கட்டுக்கோப்புடன் வைத்துக் கொள்ள உடல் எடை அதிகமாக இருந்தாலும், அதை டயட் மற்றும் உடற்பயிற்சியின் மூலம் எளிதில் குறைத்துவிடலாம். ஆனால் 40 வயதிற்கு மேல் உடல் எடையைக் குறைப்பது என்பது மிகவும் கடினமாக இருக்கும். பிட்னஸ் நிபுணரான ரோஷ்னி ஷா, ஏன் வயது அதிகரிக்கும் போது உடல் எடையைக் குறைப்பது மிகவும் கடினமாக உள்ளது என்று ஒருசில காரணிகளைப் பட்டியலிட்டுள்ளார். அதைக் கொஞ்சம் படித்துப் பாருங்கள்.


தசைகளின் அடர்த்தி குறையும்:
 உடலின் மெட்டபாலிசத்தை நிலையாக வைத்துக் கொள்ள தசைகள் கலோரிகளை எரிக்கும். ஆனால் 40 வயதில் தசைகளின் அடர்த்தி குறைய ஆரம்பிக்கும். இதனால், எவ்வளவு தான் கலோரிகளை உட்கொண்டாலும், தசைகளால் கலோரிகளை எரிக்க முடியாமல் உடல் பருமன் தான் அதிகரிக்கும்.

பளு தூக்குவது நிறுத்துவது: 
பெரும்பாலானோர் 40 வயதிற்கு மேல் பளு தூக்கும் பயிற்சி கடினமாக உள்ளது என்று நிறுத்திவிடுவார்கள். ஆனால் தசைகளின் வளர்ச்சிக்கு பளு தூக்கும் பயிற்சி தான் முக்கியமானது. இதை தவிர்க்கும் போது, தசைகளின் அடர்த்தி குறைய ஆரம்பிக்கும். எனவே உடலின் மெட்டபாலிசத்தை நிலையாக வைத்துக் கொள்ள வாரத்திற்கு 2-4 முறையாவது பளு தூக்கும் பயிற்சியை மேற்கொள்ளுங்கள்.

வயிற்றில் கொழுப்புக்கள் தேங்கும்:
 
40 வயதிற்கு முன்பு வரை உங்கள் வயிறு தட்டையாக இருக்கலாம். ஆனால் 40 வயதிற்கு மேல் ஈஸ்ட்ரோஜென் மற்றும் புரோஜெஸ்டிரோன் ஹார்மோன்களின் அளவு குறைவதால், கொழுப்புக்கள் வயிற்றுப் பகுதியில் தேக்கி வைக்கப்படுகிறது. ஆகவே தொப்பை வராமல் இருக்க வேண்டுமெனில், 40 வயதிற்கு மேல் புரோட்டீன் உணவுகளை அதிகம் சாப்பிடுங்கள்.

உணவுகளைத் தவிர்த்தல்: 

இரவில் வயிறு நிறைய சாப்பிட்டுவிட்டேன் என்று, காலை உணவைத் தவிர்ப்பது மிகவும் தவறான பழக்கம். பொதுவாக உடலின் சீரான செயல்பாட்டிற்கு குறிப்பிட்ட அளவு கலோரிகள் அவசியம். இல்லாவிட்டால், மறுவேளை உணவு உட்கொள்ளும் போது அளவுக்கு அதிகமாக உட்கொள்ள வேண்டி, உடல் எடையைக் குறைக்க முடியாமல் அவஸ்தைப்படக்கூடும்.

சைவ உணவாளராக மாறுவது:

வயது அதிகரிக்கும் போது, இறைச்சிகளால் தான் உடல் எடையைக் குறைக்க முடியவில்லை என்று நினைத்து, பலரும் சைவ உணவாளராக மாறுவார்கள். அதுவும் நல்ல பழக்கம் தான். ஆனால் சைவ உணவாளராக மாறுகிறேன் என்று ஆரோக்கியமற்ற சைவ உணவாளராக மாறி, எடை குறைவதற்கு பதிலாக நாளுக்கு நாள் அதிகரித்திருப்பீர்கள்.




Thursday, March 30, 2017

தினந்தோறும் முளைக்க்கீரையை சாப்பிடுவதால் உண்டாகும் நன்மை!

   தினந்தோறும் முளைக்க்கீரையை சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகளையும், நோய்களை குணப்படுத்துவதைப் பற்றியும் இங்கே குறிப்பிடப்பட்டுள்ளது.

முளைக்கீரை வயிற்றுப்புண்ணை ஆற்றுவதில் சிறந்து விளங்குகிறது.. கண்பார்வையை கூர்மையாக்கக்கூடியது. இந்த  கீரையில் கால்சியம், பாஸ்பரஸ் போன்ற சத்து நிறைந்துள்ளது.
மாவுச்சத்தும் குறிப்பிடும் அளவுகளில் உள்ளது. அதனால், உடல் வலுவடையவும், வளரும் சிறுவர்களுக்கு இந்த  கீரையை தொடர்ந்து கொடுத்து வந்தால் உடல் நல்ல வளர்ச்சி அடையும். முளைக்கீரையை சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகளும்.குணமாகும் நோய்களும் பார்க்கலாம்.
இருமலுக்கு: 
இக்கீரையில் அடங்கியுள்ள இரும்பு மற்றும் தாமிர சத்து, ரத்தத்தை சுத்தம் செய்வதோடு, இதில் அடக்கியுள்ள மணிச்சத்து  மூளை வளர்ச்சிக்கு உதவுகிறது. முளைக்கீரை, அதிமதுரம் ஒரு துண்டு, மஞ்சள் 3 சிட்டிகை மூன்றையும் சேர்த்து கஷாயமாக செய்து சாப்பிட்டால் எப்படிப்பட்ட இருமலும் குணமாகும்.

காய்ச்சல்: 
முளைக்கீரையுடன் சீரகத்தை நெய்யில் வறுத்து சேர்த்து, மிளகாய் வற்றலை கிள்ளிப்போட்டு, தண்ணீர் சேர்த்து அவித்து சாற்றை வடித்து, சாதத்தோடு கலந்து சாப்பிட்டால் அனைத்து வகையான காய்ச்சலும் குணமாகும்.

மூலம்: 
முளைக்கீரை, துத்திக்கீரை இரண்டையும் சம அளவு எடுத்து, சிறுபருப்பு சேர்த்து சமைத்து சாப்பிட்டால் உள்மூலம், , ரத்த மூலம் போன்றவை சரியாகும்.


பசியின்மை: 
முளைக்கீரையுடன் மிளகு, சீரகம், பூண்டு, சின்ன வெங்காயம், மஞ்சள் ஆகியவற்றை சேர்த்து கொதிக்க வைத்து சாப்பிட்டால்  பசியின்மை நீங்கி, நல்ல பசி உண்டாகும்

வயிற்றுப் புண்: 
முளைக்கீரையை பாசிப்பருடன் சேர்த்து சமைத்து தினந்தோறும் சாப்பிட்டு வந்தால் வயிற்றுப் புண் ஆறிவிடும். அல்சர் குணமாகும்.






Monday, March 27, 2017

மருதாணி இலைகளில் உள்ள உடல்நல பயன்கள்!!!

மருதாணியை விரும்பாத பெண்களே இருக்க முடியாது. மருதாணியை எதற்கு பயன்படுத்துகிறீர்கள் என்று கேட்டால் கைக்கு அலங்கரிக்க என்று தான் அனைத்து பெண்களும் ஒரே மாதிரி சொல்வார்கள். மருதாணியை பொதுவாக ஹென்னா அல்லது மெஹந்தி என்று நம் நாட்டில் அழைப்போம். இது அனைவருக்கும் தெரிந்த ஒரு ஆயுர்வேத மூலிகையாகும். பண்டிகை மற்றும் திருமண விழாக்களின் போது அதனை கொண்டு பெண்களின் கைகளில் அழகிய டிசைன்களை வரையலாம். மிகவும் புனிதமானதாகவும் சமயப்பற்றானதாகவும் கருதப்படும் மருதாணி பெண்களின் 7 ஸ்ரிங்காரத்தில் முக்கியமான ஒன்றாக திகழ்கிறது. மருதாணி பழுப்பு அல்லது கருப்பு நிறத்தில் இருக்கும். அதனை தடவினால் பொருட்களை சிகப்பு அல்லது பழுப்பு நிறத்தில் மாற்ற கூடிய தன்மையை கொண்டுள்ளது. அதனால் சரும டிசைன் மற்றும் நரைத்த தலை முடியை கலரிங் செய்வதற்காகவும் இதனை ஒரு அழகு சாதனமாகவும் பயன்படுத்துகின்றார். மருதாணியை கொண்டு பல அழகு வேலையில் ஈடுபடலாம். இது போக இதில் பல உடல்நல நன்மைகளும் அடங்கியுள்ளது. மருதாணி இலைகள் மிகவும் பயனுள்ளதாக விளங்குகிறது. அந்த இலைகளை பொடியாக்கி, அல்லது பேஸ்டாக்கி அல்லது இல்லை வடிவத்திலேயே பல காரணங்களுக்கு பயன்படுத்தப்பட்டு வருகிறது. அப்படி அது எதற்கு உபயோகமாக இருக்கிறது என்று தெரிந்து கொள்வோமா?

குளிர்ச்சியை ஏற்படுத்தும் தன்மை மருதாணியில் 
குளிர்ச்சி ஏற்படுத்தும் தன்மை இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. வீக்கத்தை கட்டுப்படுத்த அதனை அழற்சி நீக்கி பொருளாகவும் பயன்படுத்தலாம். அதன் இலைகளை பேஸ்டாக மாற்றி வீங்கிய பகுதியில் தடவி, அது காயும் வரை அப்படியே விட்டு விடுங்கள். பின் அதனை கழுவி விடுங்கள். வீக்கம் முதுவாக வற்ற ஆரம்பிக்கும். பேஸ்ட் வடிவில் இருக்கும் மருதாணி இலைகளை உடல் சூட்டை தணிக்கவும் பயன்படுத்தலாம். இரவு தூங்கும் போது மருதாணி பேஸ்டை பாதத்தில் தடவினால் உடலுக்கு குளிர்ச்சியை ஏற்படுத்தும். இது சிறப்பாக செயல்படுகிறது என்று நிரூபிக்கப்பட்டும் உள்ளது.

தலை முடி காப்பான்
அனைத்து வகை தலைமுடி பிரச்சனைகளுக்கும் பவுடர் அல்லது பேஸ்ட் வடிவில் உள்ள மருதானை இலைகளை பயன்படுத்தலாம். வாரம் ஒரு முறை இந்த பேஸ்டை யங்கள் தலை முடியில் தடவினால் பொடுகு குறைந்து, தலைமுடியை மென்மையாக்கி, பளபளப்பை உண்டாக்கும். மேலும் நரை முடியை மறைப்பதற்காகவும் அதனை பயன்படுத்தலாம். மருதாணி இலைகள் உங்கள் முடிகளை சரி செய்து மீண்டும் பொழிவை பெறச் செய்யும். அதற்கு நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம் இது தான் - சீரான முறையில் மருதாணியை பயன்படுத்த வேண்டும்.


தீக்காயம்
தீக்காயங்களுக்கு மருதாணி இலைகள் பெரிதும் உதவி புரியும். ஏற்கனவே சொன்னதை போல மருதாணியில் குளிர்ச்சி ஏற்படுத்தும் தன்மை உள்ளது. அதனால் மருதாணி இலைகளை தீக்காயம் ஏற்பட்டுள்ள இடத்தில் தடவினால் வலி வெகுவாக குறையும். அதனால் தீக்காயங்களுக்கு மருதாணி இலைகளை மருந்தாக பயன்படுத்தலாம்.

வலி நிவாரணி
குளிர்ச்சி ஏற்படுத்தும் தன்மையுள்ள மருதாணியை தலை வலி நிவாரணியாகவும் பயன்படுத்தலாம். மருதாணி இலைகள் அல்லது அதன் பவுடர் அல்லது பேஸ்டை நெத்தியில் தடவினால் தீவிரமான தலைவலியாக இருந்தாலும் கூட குறைந்து விடும். அதனை சீராக பயன்படுத்தினால் மைக்ரைன் பிரச்சனைக்கும் நிவாரணியாக விளங்கும். ஆஸ்பிரின் மாத்திரைக்கு சிறந்த மாற்றாக விளங்குகிறது மருதாணி.

கல்லீரல் பாதுகாப்பு
மஞ்சள் காமாலை போன்ற கல்லீரல் பிரச்சனைகளை குணப்படுத்தும் குணங்களை கொண்டுள்ளது மருதாணி. மஞ்சள் காமாலை என்பது ஆபத்தான காய்ச்சலாகும். சில நேரம் அதற்கான சிகிச்சையும் சிக்கலாகி விடும். அதனால் மஞ்சள் காமாலையை குணப்படுத்த நல்ல ஆயுர்வேத மருந்தாக மருதாணியை எடுத்துக் கொள்ளலாம். எந்த ஒரு பக்க விளைவுகளும் ஏற்படாது.

காசநோய் எதிர்ப்பான்
TB என்று அழைக்கப்படும் காசநோயை குணப்படுத்த மருதாணி பெரிதும் உதவுகிறது. காசநோய்க்கு எதிராக மருதாணி இலைகள், பவுடர் மற்றும் பேஸ்ட் செயல்படும். இருப்பினும் மருத்துவரை கலந்தாலோசித்த பின்னரே அதனை பயன்படுத்த வேண்டும்.

மருதாணியின் மற்ற நன்மைகள்


மருதாணியில் இன்னமும் கூட பல உடல்நல நன்மைகள் அடங்கியுள்ளது. அதனை ஆன்டி-பாக்டீரியல் பேஸ்ட் அல்லது ஆன்டி-ஃபங்கல் பேஸ்ட்டாக பயன்படுகிறது. முடி வளர்ச்சிக்கும் இதனை பயன்படுத்தலாம். மருதாணியில் இனிமையான நறுமணமும் வீசும். மருதாணி இலைகளோடு, மருதாணி பட்டையும் உடல்நலத்திற்கு பெரிதும் உதவுகிறது. சமயஞ்சார்ந்த காரணங்களை தவிர்த்து பயனுள்ள முக்கியமான ஆயுர்வேத செடியாக விளங்குகிறது மருதாணி. இச்செடியின் ஒவ்வொரு பாகமும் நமக்கு பயனை அளிக்கிறது. அதனால் மருதாணி என்பது கைகளுக்கு வர்ணம் சேர்க்க மட்டும் என்று எண்ணி விடாதீர்கள்.









Wednesday, March 22, 2017

சந்தோசத்தை நாளும் வழங்கும் சனி பகவான் கவசம்









கருநிறக் காகம் ஏறி
காசினி தன்னை காக்கும்
ஒரு பெரும் கிரகமான
ஒப்பற்ற சனியே! உந்தன்
அருள் கேட்டு வணங்குகின்றேன்
ஆதரித் தெம்மை காப்பாய்!
பொருளோடு பொன்னை அள்ளி
பூவுலகில் எமக்குத் தாராய்!
 --------- (1)



ஏழரை சனியாய் வந்தும்.
எட்டினில் இடம் பிடித்தும்.
கோளாறு நான்கில் தந்தும்.
கொண்டதோர் கண்ட கத்தில்
ஏழினில் நின்ற போதும்
இன்னல்கள் தாரா வண்ணம்
ஞாலட்தில் எம்மைக் காக்க
நம்பியே தொழுகின்றேன் நான்! ------ 
(2)



பன்னிறு ராசி கட்கும் 
பாரினில் நன்மை கிட்ட
எண்ணிய எண்ணம் எல்லாம்
ஈடேறி வழிகள் காட்ட
எண்ணெயில் குளிக்கும் நல்ல
ஈசனே உனைத்துதித்தேன்
புண்ணியம் எனக்கு தந்தே
புகழ்கூட்ட வேண்டும் நீயே!
 --------- (3)


கருப்பினில் ஆடை ஏற்றாய்!
காகத்தில் ஏறி நின்றாய்!
இரும்பினை உலோகமாக்கி
எள்தனில் பிரியம் வைத்தாய்!
அரும்பினில் நீல வண்ணம்
அணிவித்தால் மகிழ்ச்சி கொள்வாய்!
பெரும் பொருள் வழங்கும் ஈசா
பேரருள் தருக நீயே! --------- (4)

மந்தனாம் காரி , நீலா
மணியான மகர வாசா!
தந்ததோர் கவசம் கேட்டே
சனியென்னும் எங்கள் ஈசா
வந்திடும் துயரம் நீக்கு
வாழ்வினை வசந்தம் ஆக்கு!
எந்த நாள் வந்த போதும்
இனிய நாள் ஆக மாற்று! --------- (5)

அன்னதானத்தின் மீது
அளவிலா பிரியம் வைத்த
மன்னனே!  சனியே!  உன்னை
மனதார  போற்றுகின்றோம்!
உன்னையே சரணடைந்தோம்!
உயர்வெல்லாம் எமக்குத்தந்தே.
மன்னர் போல் வாழ்வதற்கே
மணியான வழிவகுப்பாய்! 
 ---------  (6)

குளிகனை மகனாய் பெற்றாய்!
குறைகளை அகல வைப்பாய்!
எழிலான சூரியன் உன்
இணையற்ற தந்தை யாவார்
விழிபார்த்து பிடித்து கொள்வாய்!
விநாயகர், அனுமன் தன்னை
தொழுதாலோ விலகிச் செல்வாய்
துணையாகி அருளை தாராய்! 
 ------- (7)

சனியெனும் கிழமை கொண்டாய்
சங்கடம் விலக வைப்பாய்
அணிதிகழ் அனுஷம் , பூசம்
ஆன்றதோர் உத்ரட்டாதி.
இனிதே உன் விண்மீ னாகும்
எழில் நீலா மனைவியாவாள்
பணியாக உனக்கு ஆண்டு
பத்தொன்போதென்று சொல்வார்!
 ---- (8
)