Pages

Header

Saturday, July 15, 2017

இதை பருகுவதால் ஆண்மை அதிகரிக்கும், பெண்கள் கர்ப்பமடையும் வாய்ப்பு அதிகரிக்கும்!

                  திருமணத்திற்கு பிறகு தம்பதிகளின் அடுத்த எதிர்பார்ப்பு குழந்தையாக தான் இருக்கும். குழந்தை பிறக்கப்போகிறது என்ற ஆனந்தம் குடும்பத்தில் அனைவரையும் குதுகலமாக்கிவிடும். குழந்தைக்காக முயற்சி செய்யும் தம்பதிகள் பலர் குழந்தையின்மை பிரச்சனைகளால் அவதிப்படுகின்றனர். இந்த பிரச்சனைகளை தீர்க்க நீங்கள் மருத்துவமனை படிகளையோ அல்லது கோவில் படிகளையோ ஏறி இறங்க வேண்டிய அவசியம் இல்லை. ஒரு சூப்பரான தீர்வு இருக்கிறது அது என்னவென்று இந்த பகுதியில் காணலாம்.

ப்ரூட் ஸ்மூத்தி: 

ப்ரூட் ஸ்மூத்தி என்பது வேறு ஒன்றும் இல்லை. பிரஷ் ஆன பழச்சாறுடன் பால் அல்லது யோகார்ட் கலந்து குடிப்பதாகும். இதில் அளவற்ற ஆரோக்கியம் உள்ளது. இந்த ப்ரூட் ஸ்மூத்தியில் ஒமேகா 3 மற்றும் விட்டமின் டி சத்துக்கள் ஏராளமாக உள்ளன. இது புது மண தம்பதிகள் உடலுறவில் சிறப்பாக செயல்பட

மல்டிவிட்டமின்:
நீங்கள் உடல் ஆரோக்கியத்திற்காக எடுத்துக்கொள்ளும் மல்டி விட்டமின் மாத்திரைகளை இந்த ப்ரூட் ஸ்மூத்தியை பருகினால் எடுத்துக்கொள்ளவே தேவையில்லை. இதிலேயே அனைத்து சத்துக்களும் உள்ளன.

வாய்ப்புகள் அதிகம்:
 
ஒமேகா 3 மற்றும் விட்டமின் டி அடங்கியுள்ள பழங்களை இதற்காக பயன்படுத்தும் போது உங்களது கருவுறும் திறன் 5% அதிகரிக்கிறது. இதனால் நீங்கள் கருவுறுவது எளிதாகிறது.

விந்தணு உற்பத்தி:
 
ப்ரூட் ஸ்மூத்தியை பருகுவதால் ஆண்களின் விந்தணுக்களின் அளவு மற்றும் திறன் அதிகரிக்கிறது. இது பெண்களின் கருமுட்டையை அடையும் அளவிற்கு பலமாகிறது.

மாத்திரைகளை விட:

சிறந்தது நீங்கள் ஏராளமான மாத்திரைகளை வாங்கி சாப்பிடுவதை விட இயற்கையான ப்ரூட் ஸ்மூத்தியை சாப்பிடுவது மிகச்சிறந்தது. இது உடல்நலத்திற்கும் சிறந்தது.

ஆரோக்கியமான குழந்தை:

ப்ரூட் ஸ்மூத்தியை பருகுவதால் கணவன் மனைவி இருவரும் ஆரோக்கியமாக இருக்க முடிகிறது. இதனால் குழந்தையும் ஆரோக்கியமாக வளருகிறது. இதனை குழந்தைக்காக முயற்ச்சிக்கும் தம்பதிகள் பருகுவது சிறந்தது என ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.



Monday, May 15, 2017

தூங்கும் போது அடிக்கடி பேய் அமுக்குவது போல் இருக்கிறதா?


தூங்கும் போது உங்களை யாராவது  அமுக்குவது போல் இருக்கிறதா?

தூங்குறப்போ......அடிக்கடி என்னை பேய் வந்து அமுக்குதுன்னு நிறைய பேரு சொல்லிக் கேட்டுருப்போம்..!

அவ்வளவு ஏன்..? நம்மில் பலருக்கும்  அந்த அனுபவமும் கூட இருக்கும்..! அது ஏன்?

உண்மையிலயே பேய் தான் வந்து அமுக்குகிறதா..? பாப்போம் வாங்க..!

மனித உறக்கத்தில் இரண்டு நிலை உண்டு.

ஒன்று விரைவான கண் அயர்  இயக்கம்
(RAPID EYE MOVEMENT @REM)

மற்றொன்று அதற்கு எதிர்பதம் (NonREM @NREM).
.
நீங்க உறங்க தொடங்கியதும் உங்களுக்கு முதலில் நிகழுவது NREM.

அடுத்து REM நிகழும்.!
இப்படி இரண்டுமே  மாறிமாறி நிகழும் தன்மை கொண்டதே மனித உறக்கம்.

ஒரு REM அல்லது NREMன் சுழற்சி 90 நிமிடங்கள் வரை இருக்கலாம்.
NREMன் கடைசி கட்டத்திலேயே உங்கள் உடல் முழுமையா உறக்கத்தின் கட்டுப்பாட்டுக்கு வந்து 100% தளர்ந்திருக்கும்.

அப்போது சுயநினைவும் முழுவதும் மங்கியிருக்கும். NREM நிலை முடிந்து REM நிலை தொடங்கும்போது உங்கள் கண்கள் கொஞ்சம் இயங்கும். கனவுகளும் தோன்றும், ஆனால் உங்கள்  உடல் இன்னும்  தளர்ச்சி நிலையிலேயே இருக்கும்.!

REM சுழற்சியில் இருக்கும் உங்கள் உடல் உறக்கத்தில் இருக்கும்போது...
அந்த சுழற்சி முடிவதற்குள் சிலநேரம்  உங்களுக்கு சுயநினைவு தோன்றினால்...
உங்கள் உடல் 100% REM சுழற்சியில் இருப்பதால் அசைக்க முடியாது.

மூளை விழித்திருக்கும். ஆனால் மூளையின் கட்டளைகளை உடல் உறுப்புகள் ஏற்றுக் கொள்ளும் நிலையில் இருக்காது (இரண்டாவது படம் பார்க்க).

அப்போதுதான் நமக்கு தோணும், "அய்யய்யோ நான் கைகாலை அசைக்க  ட்ரைப்  பண்றேன்  ஆனா என்னால முடியலயே  பேய்  வந்து அமுக்குது போல" என்று.!
சிலநேரம் அதற்கு தோதாக நமது மூளையில் நிகழ்ந்து  கொண்டிருக்கும்  கணவும்  பேய் நினைப்புக்கு சென்று  ஒரு பேயையும்  கணவில் கொண்டு வந்து காட்டும்..!

SLEEP PARALYSIS -  என்பதுதான்  உங்களை வந்து  அமுக்கிய பேய்.!
உண்மையிலயே அது பேய் அல்ல. அது நம் உறக்கத்தில் தோன்றும் ஒரு நிலை.!
உலகமெங்கும் நிறைய மக்களுக்கு இந்த SLEEP PARALYSIS நிகழ்கிறது... அதனால் பயப்பட ஏதும்  தேவை இல்லை..!!!

Saturday, April 22, 2017

சீக்கிரம் கருவளையம் மறையனுமா? இதச் செய்யுங்க!!

ராத்திரி, பகல் பார்க்காமல், தூக்கம் தவிர்த்து உழைக்கிற வர்களுக்குத்தான் முன்பெல்லாம் கருவளையங்கள் வரும். இன்றோ அது பரவலாக எல்லோருக்கும் வருகிறது. கருவளையங்கள் தோன்றக் காரணங்கள் என்ன? அதற்கான தீர்வுகள், வராமல் தவிர்க்கும் வழிகள் கருவளையங்கள் வர முக்கியமான காரணங்கள் மூன்று. ஊட்டச் சத்துக் குறைபாடு, மரபு வழி, ஸ்ட்ரெஸ் மற்றும் கண்களுக்கு அதிக வேலை கொடுப்பது. காரணத்தைக் கண்டுபிடிக்க ஒரு எளிய டெஸ்ட் உள்ளது.
கண்ணாடி முன் நின்று கொண்டு, உங்கள் கண்ணுக்கு அடியிலான பகுதியை லேசாகக் கீழே இழுத்துப் பாருங்கள். உடம்பு சரியில்லை எனப் போனால் மருத்துவர்கள் உங்கள் கண்களை டெஸ்ட் செய்வார்களே, அதே மாதிரிதான். கண்ணுக்குள் பார்க்காமல், கண்ணுக்கடியிலான தோல் பகுதியைப் பாருங்கள். அது வெள்ளையாக இருந்தால் ஊட்டச்சத்து குறைபாடுதான் காரணமாக இருக்கும். அதிலும் குறிப்பாக இரும்புச் சத்தும் ஆக்சிஜனும் குறைவாக இருக்கும். கருப்பாக இருந்தால், கருவளையத்துக்கு மரபு வழியோ, ஸ்ட்ரெஸ் எனப்படும் மன அழுத்தமோ காரணமாக இருக்கலாம். சரி காரணங்கள் தெய்ர்ந்து கொண்டாலும் அவற்றை எப்படி போக்குவது என யோசிக்கிறீர்களா? இங்கே சொல்லப்பட்டிருப்பதை முயற்சித்துப் பாருங்கள்.

கலர் உணவுகள்:

ப்ளூபெர்ரி, பசலைக்கீரை, பீர்க்கங்காய், சிவப்பு முளைக்கீரை, காளான், உலர்ந்த திராட்சை, பன்னீர் திராட்சை, சப்போட்டா, அவகேடோ, கொய்யா, கொள்ளு, குதிரைவாலி அரிசி, கருப்பு உளுந்து, ராஜ்மா, ஆட்டீரல், காட்டு சீரகம் (வைல்ட் கியூமின்), சீஸ் - இவை அத்தனையும் கருவளையங்களை விரட்டும் சக்தி கொண்டவை.

உபயோகிக்காத டீ பேக்:

உபயோகித்த டீ பைகளை கண்களின் மேல் வைப்பது முழுமையான பலன் தராது. திக்கான டீ டிகாக்ஷனை எடுத்து ஃப்ரிட்ஜில் வைக்கவும். அதில் பேப்பர் மாதிரி மெலிதாக வெட்டிய பஞ்சை நனைத்து கண்களின் மேல் வைத்துக்கொண்டு 5 முதல் 7 நிமிடங்கள் ஓய்வெடுக்கவும். கிரீன் டீயாக இருந்தால் இன்னும் சிறப்பு.

பார்லி அரிசி, கருஞ்சீரகம்:

பார்லி அரிசி, கருஞ்சீரகத்தை தலா 2 டீஸ்பூன் எடுத்து அரை டம்ளர் தண்ணீரில் நன்கு வேக வைக்கவும். அது ஆறியதும் அதில் 10 மி.லி. சுத்தமான பன்னீர் கலந்து, அப்படியே 3 மணி நேரம் வைக்கவும். பிறகு வடிகட்டி. பஞ்சில் நனைத்து கண்களின் மேல் வைக்கவும். உடனடியாக ஒரு போட்டோ செஷனுக்கு தயாராக வேண்டும், வெளியே பார்ட்டிக்கு போக வேண்டும், கருவளையங்கள் தெரியக்கூடாது என நினைக்கும் போது இந்த சிகிச்சை இன்ஸ்டன்ட் பலன் தரும்.

சாமந்தி பூ:

2 கைப்பிடி சாமந்திப்பூவின் இதழ்களை மட்டும் எடுத்துக் கொள்ளவும். 100 மி.லி. தண்ணீரை நன்கு கொதிக்க வைத்து, அதில் இந்தப் பூக்களைப் போட்டு, உடனே மூடி வைக்கவும். 24 மணி நேரம் அப்படியே ஊறட்டும். பிறகு அந்தத் தண்ணீரை ஃப்ரிட்ஜில் வைத்துக்கொண்டு, அவ்வப்போது பஞ்சில் நனைத்து கண்களின் மேல் வைத்துக் கொள்ளலாம். இது முகத்தில் உள்ள கரும்புள்ளிகளைக் கூட விரட்டும். அதிக எண்ணெய் பசையை நீக்கும்.

தாமரைப் பூ:
 
தாமரைப்பூ இதழ்களை மிக்சியில் தண்ணீர் விடாமல் அரைக்கவும். அதில் 10 மி.லி. விளக்கெண்ணெயும், 10 மி.லி. தேனும் கலந்து 7 மணி நேரம் வெளியே வைக்கவும். பிறகு ஃப்ரிட்ஜில் வைத்துக் கொண்டு, கண்களைச் சுற்றி பேக் போலத் தடவி, 1 மணி நேரம் கழித்துக் கழுவவும்.

முள்ளங்கி கேரட் சாறு:

முள்ளங்கிச் சாறு, கேரட் சாறு, பீட்ரூட் சாறு (தண்ணீர் விடாமல் அரைத்துப் பிழிந்தது) இந்த மூன்றையும் கலந்து, 5 மி.லி. கிளிசரினும் 5 மி.லி. எலுமிச்சைச் சாறும் சேர்த்து ஃப்ரிட்ஜில் வைத்து தேவைப்படும் போது பஞ்சில் நனைத்துக் கண்களின் மேல் வைத்துக் கொள்ளலாம்.












Wednesday, April 12, 2017

அவகாடோ கொட்டையின் மருத்துவ நன்மைகள்............

நம்மில் பலர் அவகேடோவின் விதை புற்றுநோய் மற்றும் தைராய்டு பிரச்சனைகளுக்கு தீர்வைத் தரக் கூடியது என்று தெரியாமல் அதைத் தூக்கி எரிந்து விடுகின்றனர். இந்த அவகேடோ விதைகள் பல்வேறு வழிகளில் பல சுகாதார நன்மைகளைத் தருகிறது. நீங்கள் அவகேடோ விதையை சாப்பிடுவது சாத்தியமற்றது என்று நினைக்கலாம் ஆனால் உங்களின் ஆரோக்கியத்திற்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டுமெனில் இவற்றை நிச்சயமாக எடுக்கவும் முடியும்,ஆரோக்கியத்தை மேம்படுத்தவும் முடியும்.

கொழுப்பு: 


அவகேடோ விதை கொலஸ்ட்ராலின் அளவைக் குறைக்கவும்,வீக்கத்தைக் குறைக்கவும்,இரைப்பை குடல் பிரச்னைகளைத் தீர்க்கவும் உதவுகிறது.

காய்ச்சல்: 


அவகேடோ விதைகளை உட்கொள்வதால் நோய் எதிர்ப்பு சக்தியைத் தூண்டுகிறது.பொதுவாக அவகேடோ ஃப்ளேவனால் நிறைந்து உள்ளது.எனவே இது காய்ச்சல் மற்றும் சளியை குணப்படுத்த முடியும்.

மூட்டு வலி:


இவற்றில் உள்ள கேட்டசின்கள் மற்றும் ப்ரோசியானிடின்ஸ் காரணமாக இவை சக்தி வாய்ந்த ஆன்டி-இன்ஃப்ளமேட்டரிகளாகவும் செயல்பட்டு வீக்கத்தைக் குறைக்கவும்,மூட்டு வலிகளை நீக்கவும் உதவுகிறது.

புற்று நோய்: 


இந்த விதைகள் புற்றுநோய்க்கு எதிரான பண்புகளைக் கொண்டுள்ளது.புற்றுநோய் ஆராய்ச்சி பற்றி ஒரு இதழில் "அவகேடோவின் விதையில் உள்ள சாறில் அவகேட்டின் பி உள்ளது என்றும்,இவை தீவிரமான மைலாய்டு லுகேமியா அணுக்களை தடுக்கிறது என்றும்" கண்டறிந்து ஒரு கட்டூரையை வெளியிட்டுள்ளது.

வலிப்பு நோய்: 

வலிப்பு நோயைத் தடுக்கிறது. தைராய்டு கோளாறுகளை முறைப்படுத்துகிறது. கொலாஜன் உருவாவதற்கு உறுதுணையாக உள்ளது. வயிற்றுப்போக்குக்கு சிகிச்சை அளிக்கிறது. சோர்வை நீக்குகிறது. தசைகளின் சோர்வை/வலி ஏற்பட்டால் நீக்குகிறது . கட்டிகளின் வளர்ச்சியைத் தடுக்கிறது.

Saturday, April 1, 2017

உடல் எடையை குறைக்க உதவும் 6 அற்புத வைத்தியங்கள்

உடலை கட்டுக்க்கோபாக வைப்பது மறைந்து காலப்போக்கில் சிறு வயதிலிருந்தே உடல் பருமனோடு வாழ தொடங்கி விட்டது இன்றைய சமூகம். காரணம் வாழ்க்கை முறையையும், உணவு முறையும் மாற்றப்பட்டதே காரணம்.

உடல் பருமன் பலவித நோய்களை தருகிறது என்பதில் எந்த வித சந்தேகமுமில்லை. ஆனால் அக்கறையேயில்லாமல் இருந்து பிறகு வாழ் நாள் முழுவதும் நோய்களோடு கிடப்பதை விட்டு , உடல் எடை குறைக்க முயற்சிப்பது மிகம் முக்கியம். நமது பாரம்பரிய வைத்திய முறைகளில் ஆயுர்வேத மூலிகைகள் உடல் எடை குறைக்கச் செய்யும் வகையில் குணங்களை பெற்றுள்ளது. அவற்றைப் பற்றி இங்கு காண்போம்.


நெல்லிக்காய்: 
நெல்லிக்காயை கொட்டை நீக்கி சுத்தம் செய்து, சாறு எடுத்து அதனுடன் சிறிது இஞ்சிச்சாறு கலந்து தினமும் காலையில் குடித்து வந்தால் கொழுப்பு குறையும்.

ஆமணக்கு:
 

ஆமணக்கின் வேரை இடித்து தேன் கலந்து நீரில் இரவு ஊற வைத்து காலையில் கசக்கிப் பிழிந்து, நீரை வடிகட்டி குடித்தால் உடல் பருமன் குறையும்.


பாதாம்: 
பாதாம் பவுடரை எடுத்து சிறிது தேன் கலந்து காலையில் சாப்பாட்டிற்கு பிறகு சாப்பிட்டு வந்தால் உடல் எடை குறையும்.


கேரட்: 
கேரட்டுடன் தேன் சேர்த்து சாப்பிட்டு வந்தால் தேவையற்ற கொழுப்பு குறைந்து உடல் எடை குறையும்.


சோம்பு: 
சோம்பு தண்ணீரில் போட்டு காய்ச்சி அடிக்கடி தினமும் குடித்து வந்தால் உடல் எடை குறையும்.


திரிபலா: 
திரிபலா சூரணத்தை வெந்நீரில் கலந்து காலையில் குடித்தால் எடை குறையும்






Friday, March 31, 2017

ஏன் 40 வயதிற்கு மேல் தொப்பையை எளிதில் குறைக்க முடியவில்லை என்று தெரியுமா?

       
இளம் வயதில் உடலைக் கட்டுக்கோப்புடன் வைத்துக் கொள்ள உடல் எடை அதிகமாக இருந்தாலும், அதை டயட் மற்றும் உடற்பயிற்சியின் மூலம் எளிதில் குறைத்துவிடலாம். ஆனால் 40 வயதிற்கு மேல் உடல் எடையைக் குறைப்பது என்பது மிகவும் கடினமாக இருக்கும். பிட்னஸ் நிபுணரான ரோஷ்னி ஷா, ஏன் வயது அதிகரிக்கும் போது உடல் எடையைக் குறைப்பது மிகவும் கடினமாக உள்ளது என்று ஒருசில காரணிகளைப் பட்டியலிட்டுள்ளார். அதைக் கொஞ்சம் படித்துப் பாருங்கள்.


தசைகளின் அடர்த்தி குறையும்:
 உடலின் மெட்டபாலிசத்தை நிலையாக வைத்துக் கொள்ள தசைகள் கலோரிகளை எரிக்கும். ஆனால் 40 வயதில் தசைகளின் அடர்த்தி குறைய ஆரம்பிக்கும். இதனால், எவ்வளவு தான் கலோரிகளை உட்கொண்டாலும், தசைகளால் கலோரிகளை எரிக்க முடியாமல் உடல் பருமன் தான் அதிகரிக்கும்.

பளு தூக்குவது நிறுத்துவது: 
பெரும்பாலானோர் 40 வயதிற்கு மேல் பளு தூக்கும் பயிற்சி கடினமாக உள்ளது என்று நிறுத்திவிடுவார்கள். ஆனால் தசைகளின் வளர்ச்சிக்கு பளு தூக்கும் பயிற்சி தான் முக்கியமானது. இதை தவிர்க்கும் போது, தசைகளின் அடர்த்தி குறைய ஆரம்பிக்கும். எனவே உடலின் மெட்டபாலிசத்தை நிலையாக வைத்துக் கொள்ள வாரத்திற்கு 2-4 முறையாவது பளு தூக்கும் பயிற்சியை மேற்கொள்ளுங்கள்.

வயிற்றில் கொழுப்புக்கள் தேங்கும்:
 
40 வயதிற்கு முன்பு வரை உங்கள் வயிறு தட்டையாக இருக்கலாம். ஆனால் 40 வயதிற்கு மேல் ஈஸ்ட்ரோஜென் மற்றும் புரோஜெஸ்டிரோன் ஹார்மோன்களின் அளவு குறைவதால், கொழுப்புக்கள் வயிற்றுப் பகுதியில் தேக்கி வைக்கப்படுகிறது. ஆகவே தொப்பை வராமல் இருக்க வேண்டுமெனில், 40 வயதிற்கு மேல் புரோட்டீன் உணவுகளை அதிகம் சாப்பிடுங்கள்.

உணவுகளைத் தவிர்த்தல்: 

இரவில் வயிறு நிறைய சாப்பிட்டுவிட்டேன் என்று, காலை உணவைத் தவிர்ப்பது மிகவும் தவறான பழக்கம். பொதுவாக உடலின் சீரான செயல்பாட்டிற்கு குறிப்பிட்ட அளவு கலோரிகள் அவசியம். இல்லாவிட்டால், மறுவேளை உணவு உட்கொள்ளும் போது அளவுக்கு அதிகமாக உட்கொள்ள வேண்டி, உடல் எடையைக் குறைக்க முடியாமல் அவஸ்தைப்படக்கூடும்.

சைவ உணவாளராக மாறுவது:

வயது அதிகரிக்கும் போது, இறைச்சிகளால் தான் உடல் எடையைக் குறைக்க முடியவில்லை என்று நினைத்து, பலரும் சைவ உணவாளராக மாறுவார்கள். அதுவும் நல்ல பழக்கம் தான். ஆனால் சைவ உணவாளராக மாறுகிறேன் என்று ஆரோக்கியமற்ற சைவ உணவாளராக மாறி, எடை குறைவதற்கு பதிலாக நாளுக்கு நாள் அதிகரித்திருப்பீர்கள்.




Thursday, March 30, 2017

தினந்தோறும் முளைக்க்கீரையை சாப்பிடுவதால் உண்டாகும் நன்மை!

   தினந்தோறும் முளைக்க்கீரையை சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகளையும், நோய்களை குணப்படுத்துவதைப் பற்றியும் இங்கே குறிப்பிடப்பட்டுள்ளது.

முளைக்கீரை வயிற்றுப்புண்ணை ஆற்றுவதில் சிறந்து விளங்குகிறது.. கண்பார்வையை கூர்மையாக்கக்கூடியது. இந்த  கீரையில் கால்சியம், பாஸ்பரஸ் போன்ற சத்து நிறைந்துள்ளது.
மாவுச்சத்தும் குறிப்பிடும் அளவுகளில் உள்ளது. அதனால், உடல் வலுவடையவும், வளரும் சிறுவர்களுக்கு இந்த  கீரையை தொடர்ந்து கொடுத்து வந்தால் உடல் நல்ல வளர்ச்சி அடையும். முளைக்கீரையை சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகளும்.குணமாகும் நோய்களும் பார்க்கலாம்.
இருமலுக்கு: 
இக்கீரையில் அடங்கியுள்ள இரும்பு மற்றும் தாமிர சத்து, ரத்தத்தை சுத்தம் செய்வதோடு, இதில் அடக்கியுள்ள மணிச்சத்து  மூளை வளர்ச்சிக்கு உதவுகிறது. முளைக்கீரை, அதிமதுரம் ஒரு துண்டு, மஞ்சள் 3 சிட்டிகை மூன்றையும் சேர்த்து கஷாயமாக செய்து சாப்பிட்டால் எப்படிப்பட்ட இருமலும் குணமாகும்.

காய்ச்சல்: 
முளைக்கீரையுடன் சீரகத்தை நெய்யில் வறுத்து சேர்த்து, மிளகாய் வற்றலை கிள்ளிப்போட்டு, தண்ணீர் சேர்த்து அவித்து சாற்றை வடித்து, சாதத்தோடு கலந்து சாப்பிட்டால் அனைத்து வகையான காய்ச்சலும் குணமாகும்.

மூலம்: 
முளைக்கீரை, துத்திக்கீரை இரண்டையும் சம அளவு எடுத்து, சிறுபருப்பு சேர்த்து சமைத்து சாப்பிட்டால் உள்மூலம், , ரத்த மூலம் போன்றவை சரியாகும்.


பசியின்மை: 
முளைக்கீரையுடன் மிளகு, சீரகம், பூண்டு, சின்ன வெங்காயம், மஞ்சள் ஆகியவற்றை சேர்த்து கொதிக்க வைத்து சாப்பிட்டால்  பசியின்மை நீங்கி, நல்ல பசி உண்டாகும்

வயிற்றுப் புண்: 
முளைக்கீரையை பாசிப்பருடன் சேர்த்து சமைத்து தினந்தோறும் சாப்பிட்டு வந்தால் வயிற்றுப் புண் ஆறிவிடும். அல்சர் குணமாகும்.